தனியார்மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


தனியார்மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2020 4:43 AM IST (Updated: 22 Dec 2020 4:43 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மின்வாரிய தொழிற்சங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பொதுத்துறையான மின்துறையை படிப்படியாக தனியாருக்கு தாரைவார்க்க திட்டமிட்டு வருகிற தமிழக அரசையும், மின்வாரியத்தையும் கண்டித்தும் பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மின்வாரிய தொழிற்சங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா, செயற்பொறியாளர்கள் செல்வராஜ் (அரியலூர்) , ராஜேந்திரன் (பெரம்பலூர்) , பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், களப்பணியாளர்கள், ஒப்பந்த மின் ஊழியர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் அனைத்து உத்தரவுகளையும், மின்வாரியமும், தமிழக அரசும் கைவிட வேண்டும். வாரிய தலைவரின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தினால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.

Next Story