மாவட்ட செய்திகள்

காரையூரில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு + "||" + Prizes for the winning teams in the Kabaddi competition in Karaiyur

காரையூரில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

காரையூரில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
காரையூரில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
காரையூர்,

புதுக்கோட்டை மாவட்டம், காரையூரில் ஆண்டுதோறும் கபடி போட்டி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான கபடி போட்டி நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து 52 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டன.


பரிசு

இதில் முதல் பரிசை செமலாபட்டி கபடி அணியினரும், இரண்டாவது பரிசை மலையப்பநகர் கபடி அணியினரும், மூன்றாம் பரிசை கரூர் கபடி அணியினரும், நான்காம் பரிசை உப்புப்பட்டி கபடி அணியினரும் வெற்றி பெற்றனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகளும் கோப்பைகளும் வழங்கினர்.

மேலும் சிறந்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காரையூர் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர். இந்த போட்டியை காரையூர், பொன்னமராவதி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்:கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது.
2. கிராம வளர்ச்சிக்காக பஞ்சாயத்து தேர்தலில் 81 வயது மூதாட்டி போட்டி
கிராம வளர்ச்சிக்காக பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 81 வயது மூதாட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
3. கொரோனா பரவல் எதிரொலி: தேசிய பெண்கள் ஆக்கி போட்டி தள்ளிவைப்பு
கொரோனா பரவல் எதிரொலி: தேசிய பெண்கள் ஆக்கி போட்டி தள்ளிவைப்பு.
4. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கம்
டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் 2-வது நாளில் இந்தியா 5 பதக்கங்களை அள்ளியது.
5. தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு அதிகபட்சமாக கரூரில் 90 பேர் போட்டி
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு செய்து உள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் போட்டியிட 90 பேர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.