மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் மாமல்லபுரம் வருகை; புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்தார்


மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் உள்ள யானை சிலை முன்பு வெளியுறவுத்துறை செயலாளர் விகாஸ் வரப் மனைவியுடன்
x
மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் உள்ள யானை சிலை முன்பு வெளியுறவுத்துறை செயலாளர் விகாஸ் வரப் மனைவியுடன்
தினத்தந்தி 22 Dec 2020 5:08 AM IST (Updated: 22 Dec 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்துக்கு வருகை தந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் அங்குள்ள புராதன சின்னங்களை மனைவியுடன் சுற்றி பார்த்து ரசித்தார்.

வெளியுறவுத்துறை அதிகாரி
டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் விகாஸ்வரப் நேற்று தனது மனைவியுடன் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகருக்கு வருகை புரிந்தார். அவர் அங்குள்ள ஐந்துரதம், கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களில் உள்ள பல்லவ மன்னர்களின் கைவண்ணத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்களை சுற்றி பார்த்து ரசித்தார். அப்போது அவருக்கு பல்லவர் கால புராதன சின்னங்கள் பற்றிய வரலாற்று தகவல்களை உடன் வந்த தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கி கூறினர்.

புகைப்பட கலையில் ஆர்வம் உள்ள அவர், தனது கழுத்தில் கேமராவை மாட்டிக்கு கொண்டு புராதன சின்னங்களை விதவிதமான கோணங்களில் புகைப்படம் எடுத்து கொண்டார்.

போலீசார் பாதுகாப்பு
ஒரு ஐ.எப்.எஸ். அதிகாரி போல் இல்லாமல் ஒரு புகைப்பட கலைஞராகவே அங்கு ஒரு கலை ரசிகனாக மாறியிருந்ததை காண முடிந்தது. முன்னதாக ஐந்துரதம் பகுதியில் தமிழக அரசு சார்பில் அவரை மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அலுவலர் ராஜாராமன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். வெளியுறவுத்துறை அதிகாரி வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவனம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story