தனியார் மயத்தை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கரூரில் நேற்று கோவை சாலையில் உள்ள கரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு கரூர் மின்வட்ட கூட்டுக்குழு சங்கங்களின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
கரூர்,
மின்வாரியத்தை தனியாருக்கு விடுவதை கண்டித்து கரூரில் நேற்று கோவை சாலையில் உள்ள கரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு கரூர் மின்வட்ட கூட்டுக்குழு சங்கங்களின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டுக்குழு தலைவர் முருகவேல் தலைமை தாங்கினார். இதில், அனைத்து கூட்டுக்குழு சங்கங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதில், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட செயலாளர் தனபால், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாவட்ட செயலாளர் பால்ராஜ், எல்.பி.எப். மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story