வேளாண் சட்ட விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் எல்.முருகன் குற்றச்சாட்டு
வேளாண் சட்ட விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டி உள்ளார்.
திருத்துறைப்பூண்டி,
வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய வேளாண் சீர்திருத்த சட்டத்தின் பயன்களை விவசாயிகளுக்கு விளக்கி வருகிறோம். இதில் இந்த சட்டம் தொடர்பாக தி.மு.க. போடும் இரட்டை வேடம் குறித்தும் விளக்கமாக தெரிவித்து வருகிறோம். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையே விவசாய சங்கங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கையாக தெரிவித்து வந்தன.
மோடிக்கு நற்பெயர்
இதே சட்டத்தை மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் வேளாண் துறை அமைச்சராக இருந்த சரத்பவார் கொண்டு வந்தார். அவரே தற்போது எதிர்த்து வருகிறார். 2016-ம் ஆண்டின் தேர்தல் அறிக்கையிலும் தி.மு.க. இந்த சட்டம் பற்றி கூறி உள்ளது. அதைத்தான் தற்போது நிறைவேற்றி உள்ளோம்.
ஆனால் பிரதமர் மோடிக்கு நற்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தற்போது இந்த சட்டத்தை எதிர்த்து வருகின்றன. இந்த எதிர்ப்பு மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
தி.மு.க. தோல்வியை சந்திக்கும்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டம் மிப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதே தோல்வியை வருகிற சட்டசைப தேர்தலிலும் தி.மு.க. சந்திக்கும்.
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள ரூ.6 ஆயிரம் உதவித்தொகை திட்டத்தால் தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். பா.ஜனதா கொள்கை பிடிப்புள்ள கட்சி என்பதால் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், பட்டியலின மக்கள், செல்வந்தர்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பா.ஜ.க. மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம், நாகை மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, திருவாரூர் மாவட்ட தலைவர் ராகவன், மாவட்ட பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
முத்துப்பேட்டை
இதைப்போல முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகத்தில் புதிய வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கோட்டூர் ராகவன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், நாகை மாவட்ட பார்வையாளர்கள் பேட்டை சிவா, கண்ணன், மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து, நிர்வாகி தில்லை ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் எல். முருகன் பேசினார். அப்போது அவர் வேளாண் அவசர சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருவதாக கூறினார்.
முன்னதாக திருத்துறைப்பூண்டியிலிருந்து தில்லைவிளாகம் வந்த எல். முருகனுக்கு எடையூர், உதயமார்த்தாண்டபுரம் ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Tags :
Next Story