மயிலாடுதுறையில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விைல உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் லதாசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளர்கள் உமாதேவி, சிவஞானசுந்தரி, சாந்தி, சியாமளா, தனவள்ளி, சந்திரா, டெய்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கலையரசி வரவேற்று பேசினார்.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
இதில் மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் கல்யாணம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தும், தொடர்ந்து சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சிலிண்டருக்கு மாலை
ஆர்ப்பாட்டத்தின்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குத்தாலம் அன்பழகன், அருள்செல்வன், பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு தலைவர்கள் காமாட்சிமூர்த்தி, நந்தினிஸ்ரீதர், கமலஜோதிதேவேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story