சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நாமக்கல், திருச்செங்கோட்டில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்


சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நாமக்கல், திருச்செங்கோட்டில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2020 9:22 AM IST (Updated: 22 Dec 2020 9:22 AM IST)
t-max-icont-min-icon

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று நாமக்கல், திருச்செங்கோட்டில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்,

மத்திய அரசு கடந்த 15 நாட்களில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.100 உயர்த்தி உள்ளது. இதை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் 21-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிர் தொண்டரணி இணை செயலாளர் ராணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ராணி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசாமி, மாவட்ட துணை செயலாளர் விமலா சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் வனிதா செங்கோட்டையன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் அமுதா, மேனகா, மகாலட்சுமி, பாக்கியம், மலர்விழி சம்பத் மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் சமையல் கியாஸ் விலை உயர்ைவ திரும்ப பெறக்கோரி திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பூங்கோதை செல்லதுரை, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் தேன்மொழி ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார் இளங்கோவன், நகர பொறுப்பாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், இளைஞர் அணி அமைப்பாளர் மதுரா செந்தில் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், பரமத்திவேலூர் எம்.எல்.ஏ.வுமான கே.எஸ்.மூர்த்தி கலந்த கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கிளை, மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story