குமாரபாளையத்தில் பயங்கரம்: தி.மு.க. நிர்வாகி குத்திக்கொலை மெக்கானிக் உள்பட 2 பேர் கோர்ட்டில் சரண்
குமாரபாளையத்தில் முன்விேராதத்தில் தி.மு.க. நிர்வாகி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மெக்கானிக் உள்பட 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
குமாரபாளையம்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 41). பட்டு ஜவுளி உற்பத்தியாளர். மேலும் குமாரபாளையம் நகராட்சி 1-வது வார்டு தி.மு.க. செயலாளராகவும் இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் காவேரி நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடையில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் பிரகாஷ் (29), அவருடைய நண்பர் கோவிந்தராஜன் (29) ஆகியோர் ஒரு மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தனர். பின்னர் கோவிந்தராஜன் அங்கிருந்து சென்று விட்டார். இதையடு்த்து சிறிது ேநரத்தில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் சரவணனை கீழே தள்ளிய பிரகாஷ், அவர் மீது அமர்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மார்பு உள்ளிட்ட இடங்களில் 10 முறை சரமாரியாக குத்தினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணனுடைய நண்பர்கள் பிரகாசை தடுத்தனர்.
நண்பர்களுக்கும் கத்திக்குத்து
அப்போது சரவணனின் நண்பர்களான பிரபாகரன், முரளிதரன் ஆகியோரையும் கத்தியால் குத்தினார். இதையடுத்து அப்பகுதிக்கு மீண்டும் வந்த கோவிந்தராஜனின் மோட்டார்சைக்கிளில் ஏறி அங்கிருந்து பிரகாஷ் தப்பி சென்று விட்டார். கத்திக்குத்தில் நிலைகுலைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த முரளிதரன், பிரபாகரனை அப்பகுதிைய சேர்ந்தவர்கள் மீ்ட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்ேபரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோர்ட்டில் சரண்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சரவணனுக்கும், மெக்கானிக் பிரகாசுக்கும் இடையே கோவில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டதும், இதனால் சரவணன் மீது ஆத்திரத்தில் இருந்த பிரகாஷ் இந்த கொலையை செய்திருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதற்கிடையே கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய பிரகாஷ், அவருக்கு உதவிய கோவிந்தராஜன் ஆகியோர் நேற்று மாலை திருச்செங்கோடு கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி சிைறயில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட சரவணனுக்கு கோமதி (34) என்ற மனைவியும், தர்ஷன் பிரியா (13) என்ற மகளும், பிரசாத் (10) என்ற மகனும் உள்ளனர்.
பரபரப்பு
குமாரபாளையத்தில் இருந்து எடப்பாடி செல்லும் பிரதான சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தி.மு.க. நிர்வாகி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story