சட்டமன்ற தேர்தலுக்காக மராட்டியத்தில் இருந்து தேனிக்கு வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
சட்டமன்ற தேர்தலுக்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்படுகிறது.
தேனி,
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களின் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்து வருகிறது. மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வி.வி.பேட் எனப்படும் ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரத்தில் பதிவான பழைய ஒப்புகைச் சீட்டுகளை அழிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் பகுதியில் இருந்து தேனிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இதை எடுத்து வருவதற்காக தேனி தனித்துணை கலெக்டர் சிவசுப்பிரமணி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் மராட்டிய மாநிலத்துக்கு சென்றனர். அங்கிருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துக் கொண்டு அந்த குழுவினர் நேற்று புறப்பட்டனர்.
சரிபார்க்கும் பணி
கன்டெய்னர் லாரியில் இந்த எந்திரங்கள் எடுத்து வரப்படுகின்றன. இதில், 1,730 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,820 கட்டுப்பாட்டு கருவிகள், 2 ஆயிரத்து 30 வி.வி.பேட் எந்திரங்கள் ஆகியவை கொண்டு வரப்படுகின்றன. இந்த எந்திரங்கள் நாளை (புதன்கிழமை) தேனி வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் இந்த எந்திரங்கள் அனைத்துக்கும் சரிபார்க்கும் பணிகள் நடத்தப்படும். இந்த பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story