மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து விழுப்புரத்தில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
மின்வாரியத்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், அரசின் இந்த முடிவை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கண்டமங்கலம் ஆகிய 4 செயற் பொறியாளர் அலுவலகங்கள், 89 உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் பணியாற்றி வரும் மின்வாரிய பணியாளர்கள், பொறியாளர்கள் பலர் பணியை புறக்கணித்து கலந்துகொண்டனர்.
பணிகள் பாதிப்பு
இதில் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன திட்ட செயலாளர் குப்புசாமி, செயல் தலைவர் சுப்பிரமணியன், மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க திட்ட தலைவர் சண்முகம், செயலாளர் வேல்முருகன், சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி, திட்ட பொருளாளர் அருள், தொழிலாளர், பொறியாளர், ஐக்கிய சங்க மாநில பொருளாளர் சிவக்குமார், மண்டல செயலாளர் பெரியசாமி, மின்வாரிய அம்பேத்கர் தொழிலாளர் சங்க நிர்வாகி கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
இவர்களின் இந்த போராட்டம் காரணமாக மின்வாரிய பழுதை சரிசெய்யும் பணி, மின் கட்டண வசூல் பணி, மின் தொடரமைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story