கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2020 5:59 AM IST (Updated: 23 Dec 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்,

போக்குவரத்து கழகத்தை பாதுகாத்திட வேண்டும். முழுமையான பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும். வரவுக்கும், செலவிற்குமான வித்தியாச தொகையை அரசே வழங்க வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். பணி கிடைக்காமல் திரும்புகின்ற தொழிலாளிகளுக்கு வருகை பதிவு வழங்கிட வேண்டும். 16 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்கிட வேண்டும். ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு, பணப்பலன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எல்.பி.எப். கிளை செயலாளர் வேணுகோபால் தலைமை தாங்கினார். இதில் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யு., உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரவக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொழிலாளர் சங்க கூட்டுக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை துணைச்செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டியு.சி. மாநில சம்மேளன நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் சங்கத்தின் கூட்டு குழுவினர் கலந்து கொண்டனர்.

Next Story