கும்பகோணத்தில் ஒரே நாள் இரவில் 12 லாரிகளில் பேட்டரிகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கும்பகோணத்தில் ஒரே இரவில் 12 லாரிகளில் இருந்து பேட்டரிகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கும்பகோணம்,
கும்பகோணம் ரெயில்நிலையத்தின் தென்புறம் கஸ்தூரிபாய் ரோட்டில் குட்ஷெட் உள்ளது. சரக்கு ரெயிலில் வரும் உர மூட்ைடகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி செல்லவும், அரவைக்காக நெல் மூட்டைகளை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரவும் இங்கு லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் இருந்து மர்மநபர்கள் இரவு நேரங்களில் பொருட்களை திருடி செல்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு நிறுத்தியிருந்த 12 லாரிகளில் பேட்டரி ஒயர்களை அறுத்து, பேட்டரி வைக்கப்படும் பெட்டைகளை உடைத்தும் மர்மநபர்கள் பேட்டரிகளை திருடி சென்றனர்.
பொதுமக்கள் அச்சம்
நேற்று காலை லாரி டிரைவர்கள் தாங்கள் ஓட்டும் லாரியை பார்த்த போது அதில் இருந்த பேட்டரிகளை ஒரே நேரத்தில் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து ரெயில் குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்லதுரை, துணைத்தலைவர் பொன்ராஜ் செயலாளர் சீனிவாசன் மற்றும் டிரைவர்கள், உரிமையாளர்கள் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். இதன்பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்கப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு பேட்டரிகளை திருடி சென்ற ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
கும்பகோணத்தில் ஒரே நாள் இரவில் 12 லாரிகளில் இருந்து பேட்டரிகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story