சோழிங்கநல்லூரில் லாரி சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் சாவு


சோழிங்கநல்லூரில் லாரி சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் சாவு
x
தினத்தந்தி 24 Dec 2020 2:41 AM IST (Updated: 24 Dec 2020 2:41 AM IST)
t-max-icont-min-icon

சோழிங்கநல்லூரில் லாரி சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூர் பரமேஸ்வரன் நகரை சேர்ந்தவர் அருள் (வயது 38) இவரது மனைவி கோகிலா (34). இவர்களது மகன் அபிஷேக் (10). அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பிற்பகல் வீட்டின் அருகே பிரகாஷ் சைக்கிள் ஓட்டி கொண்டிருந்தான்.

.அப்போது அந்த வழியாக வந்த கழிவுநீர் லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லாரி டிரைரான பிரபாகரன்(26) என்பவரை பிடித்து அடித்து உதைத்து செம்மஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர். தகவலறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி டிரைவரான பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story