அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2020 4:18 AM IST (Updated: 24 Dec 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

சில நாட்களுக்கு முன்பு தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்,

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 150 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும். ஆனால், கடந்த 6 மாதங்களாக ஊதியம் குறிப்பிட்ட நாளில் வழங்கப்படுவதில்லை. நவம்பர் மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் ஊதியத்தில் பிடிக்கப்பட்ட பிராவிடண்ட் பண்ட் பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைகண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி, வருவாய் துறை மற்றும் போலீசார் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதனை ஏற்று தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி நேற்றைய தேதி வரை அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்தும், உடனடியாக சம்பளம் மற்றும் இதர ெதாகைகளை வழங்கக்கோரியும் நேற்று காலை 6 மணியிலிருந்து நகராட்சி அலுவலக நுழைவு வாயி்ல் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரை இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், நிர்வாகத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் இன்று(வியாழக்கிழமை) முதல் நிரந்தரப் பணியாளர்கள் ஆதரவுடன் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Next Story