அரியலூர் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்குகள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்


அரியலூர் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்குகள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 24 Dec 2020 4:39 AM IST (Updated: 24 Dec 2020 4:39 AM IST)
t-max-icont-min-icon

அரியலூ் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்குகளை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், அரியலூர், திருமானூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட வெள்ளூா், திருமழபாடி, சிலுப்பனூர், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் தண்டலை ஆகிய கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு விழா நடைபெற்றது. தண்டலை கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

அப்போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தங்க பிச்சமுத்து, கல்யாணசுந்தரம், நகர செயலாளர் பி.ஆர்.செல்வராஜ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜெகன்ராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஊட்டச்சத்து பெட்டகம்

அதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களை தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கி தரவேண்டும் என்ற உன்னத நோக்கில் ஏழை, எளிய மக்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளில், மக்களுக்குச் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத பகுதிகளில் பொதுமக்களுக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும் ேபாது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகியோர்களை கொண்டு அம்மா மினி கிளினிக்குகள் செயல்படும். அரியலூர் மாவட்டதிற்கு 22 மினி கிளினிக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 4 நடமாடும் மினி கிளினிக்களாகவும் செயல்படவுள்ளது. முதற்கட்டமாக 5 மினி கிளினிக் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கிளினிக்குகள் ஊரக பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும், நகர்புற பகுதிகளில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் செயல்படும் என்றார்.

மீன்சுருட்டி

இதேபோல, கங்கைகொண்ட சோழபுரம், திரு மழபாடியில் அம்மா மினி கிளினிக்கை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட கவுன்சிலர் தனசெல்வி சக்திவேல், ஜெயங் கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜாரவி, திருமழபாடி ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா இளையராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story