பொங்கல் பரிசு எவ்வளவு கொடுத்தாலும் மக்கள் தி.மு.க. பக்கம் தான் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேச்சு
பொங்கல் பரிசு எவ்வளவு கொடுத்தாலும் மக்கள் தி.மு.க. பக்கம் தான் இருப்பார்கள் என்று திருச்சி கிராம சபை கூட்டத்தில் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசினார்.
திருச்சி,
திருச்சி உறையூர் குறத்தெருவில் நேற்று தில்லைநகர் பகுதி தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதனை தொடங்கி வைத்து தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கும், இலவச வீட்டுமனை பட்டா கிடைக்கப்பெறவேண்டும் என்பதற்காகவும் மக்கள் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறார்கள். அதனை வலியுறுத்தியே நிறைய மனுக்களை கொடுத்து இருக்கிறார்கள்.
மக்கள் தி.மு.க. பக்கம்
பொங்கல் பரிசு ரூ.2,500 கொடுத்தால் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என அ.தி.மு.க. நினைக்கிறது. இந்த பரிசு தொகை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் பொங்கல் பரிசாக ரூ.10 ஆயிரம் அல்ல எவ்வளவு கொடுத்தாலும் மக்கள் தி.மு.க. பக்கம் தான் இருப்பார்கள்.
நாங்கள் தி.மு.க. வெற்றி பெற்றால் கருணாநிதி ஆட்சியை அமைப்போம் என்று பேசி வருகிறோம். நடிகர் கமல்ஹாசன் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆட்சி அமைப்போம் என்று பேசுவதாக கேட்கிறார்்கள். பின்னர் என்ன அவர் தனது அண்ணன் சாருஹாசன் பெயரையோ, சுகாசினி பெயரையோ சொல்லியா ஓட்டு கேட்க முடியும்
இவ்வாறு அவர் பேசினார்.
லால்குடி, திருவெறும்பூர்
இதுபோல் லால்குடி அருகே பெருவளநல்லூரில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் கே.என்.நேரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி, கூத்தைப்பார் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். தலைமை கழக பேச்சாளர் சைகை சாதிக் முன்னிலை வகித்தார்.
தி.மு.க. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் கூத்தைப்பாரிலுள்ள விவசாய நிலத்தை பார்வையிட்டு அங்கு வேலை செய்த பெண்களிடம் குறையை கேட்டார்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவீந்திரன் ஒன்றிய குழுத்தலைவர் சத்யா கோவிந்தராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உப்பிலியபுரம், அந்தநல்லூர்
உப்பிலியபுரம் பகுதியிலுள்ள முருங்கப்பட்டி பாதர்பேட்டை அம்மன் கோவில் திடலில் நடந்த கூட்டத்துக்கு ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை பகிர்ந்து கொண்டனர். நாகநல்லூர், பி.மேட்டூர், மற்றும் உப்பிலியபுரத்திலும் இதுபோல் கூட்டங்கள் நடைபெற்றது.
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முள்ளிகரும்பூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முள்ளிகரும்பூர் ஊராட்சி தலைவர் கீதா தலைமை தாங்கினார். அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தார். இதுபோல் மல்லியம்பத்து ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல் தலைமை தாங்கினார். பேரூர் ஊராட்சியிலும் இதுபோல் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டது.

Related Tags :
Next Story