சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2020 9:20 AM IST (Updated: 24 Dec 2020 9:20 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கோயில்பிச்சை தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், துணை தலைவர் ராஜசேகர், வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் திருமலை முருகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் கணபதி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story