தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காவேரி, மாவட்ட பொருளாளர் தேவகி, நிர்வாகிகள் வளர்மதி, மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், நிர்வாகிகள் புகழேந்தி, பிரபாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஓய்வூதியம்
ஆர்ப்பாட்டத்தில், சத்துணவுக்கு தனி துறையை ஏற்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்கள்அனைவரையும் அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சம் வழங்கவேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவூட்ட செலவின தொகையை ஒரு மாணவருக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்கவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story