ஓசூரில் மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் உள்ள ரிலையன்ஸ் வணிக வளாகத்தின் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் மன்றம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்,
ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் உள்ள ரிலையன்ஸ் வணிக வளாகத்தின் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் மன்றம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்டு் கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் தளி எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார். இதில் நிர்வாகி மாதையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ரிலையன்ஸ் வணிக வளாகத்தை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அத்துடன், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது முகேஷ் அம்பானியின் உருவப்பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். தடுக்க முயன்ற போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

Related Tags :
Next Story