கிருஷ்ணகிரியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2020 11:53 AM IST (Updated: 24 Dec 2020 11:53 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் போக்குவரத்து கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புறநகர் கிளை அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில், போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பணிமனை தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். செயலாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.

இதில் மண்டல பொதுச்செயலாளர் கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் பரமசிவம், சி.ஐ.டி.யு.சி. மண்டல தலைவர் சண்முகம், ஐ.என்.டி.யு.சி. சத்தியநாராயணன், ஏ.ஐ.டி.யு.சி. ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொழிலாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் முனிரத்தினம் நன்றி கூறினார்.

நகர கிளை

இதேபோல் கிருஷ்ணகிரி நகர கிளை அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. பேரவை மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மத்திய சங்க துணைத்தலைவர் பார்த்தீபன், தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தொ.மு.ச. செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ராமச்சந்திரன், சி.ஐ.டி.யு.சி. ஜான்லூயிஸ், ஏ.ஐ.டி.யு.சி. பூபேஸ்குப்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

முழுமையாக இயக்க வேண்டும்

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 16-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். நிர்வாகங்கள் செலவு செய்த தொழிலாளர்களின் ரூ.7 ஆயிரம் கோடியை உடனே திருப்பி கொடுக்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை உரிய கணக்கில் செலுத்த வேண்டும். தமிழகத்தில் பொது போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும். அனைத்து பஸ்களையும் முழுமையாக இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story