கோட்டைப்பட்டினம் அருகே ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி கொலை தொழிலாளி கைது
கேட்டைபட்டினம் அருகே ஒரு பவுன் நகைக்காக மூதாட்டியை கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள கரகத்திக்கோட்டையைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி சுப்பம்மாள் (வயது 75). ரங்கன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சுப்பம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரை, அவரது உறவினர் செல்வி என்பவர் பராமரித்து வந்தார் நேற்று முன்தினம் இரவு செல்வி ஜெகதாப்பட்டினம் சென்றுவிட்டு நேற்று காலை 7 மணிக்கு சுப்பம்மாளின் வீட்டுக்கு வந்தார். அப்போது, கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கட்டிலில் சுப்பம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் மற்றும் நெற்றியில் பலத்த காயம் இருந்தது.
மேலும் அவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
கைது
இது குறித்து செல்வி கோட்டைப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாமுவேல்ஞானம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சுப்பம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் ரெகுநாதபுரம் அருகே உள்ள முதலிப்பட்டியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் வீரராஜ் (38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒரு பவுன் நகைக்காக சுப்பம்மாளை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரராஜை கைது செய்தனர். மேலும் வீரராஜ் கரகத்திக்கோட்டையைச் சேர்ந்த ஜீவா என்பவரது வீட்டில் 11 பவுன் நகைகளையும் திருடியது தெரியவந்தது.
விவசாய வேலைக்கு வந்தவர்
கைது செய்யப்பட்ட வீரராஜ், கரகத்திக்கோட்டை பகுதிக்கு விவசாய கூலி வேலை செய்ய ஒரு குழுவினரோடு வந்துள்ளார். பணிகள் முடிந்து மற்றவர்கள் சொந்த ஊர் திரும்பிய நிலையில், வீரராஜ் ஊருக்கு செல்லாமல் அப்பகுதியில் உள்ள ஒரு விவசாயி வீட்டில் தங்கியிருந்து, அவரது தோட்டத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து வீரராஜை காணவில்லை. அவர் சொந்த ஊருக்கு சென்றிருப்பார் என அந்த விவசாயி அவரை தேடாமல் விட்டுவிட்டார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு 11.15 மணி அளவில் கோட்டைப்பட்டினம் போலீகாரர் மாரியப்பன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வீரராஜ் கரகத்திக்கோட்டை-கோட்டைப்பட்டினம் சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பையுடன் நின்று இருந்தார். போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது பையை விட்டுவிட்டு வீரராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த பையில் 13 பவுன் நகை இருந்தது. இந்த நிலையில் தான் அவர் போலீசாரிடம் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story