மாவட்ட செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு + "||" + MGR in Trichy district Evening parade of political parties to the statue

திருச்சி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
எம்.ஜி.ஆர்.சிலைக்கு அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
திருச்சி,

எம்.ஜி.ஆரின் 33-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சோமரசம் பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய ெசயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.ெ்சயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்.


இதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களை இலவசமாக வழங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முசிறி எம்.எல்.ஏ.

இதுபோல் முசிறி கைகாட்டியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு முசிறி தொகுதி எம்.செல்வராஜ் எம்.எல்.ஏ. மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், ஆமூர் ஜெயராமன் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதுபோல் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஏற்பாட்டின் பேரில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநகர் மாவட்ட அ.தி.மு.க.

மேலும்திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவை தலைவர் அய்யப்பன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர். இதில் ஜவகர்லால் நேரு, மாவட்ட துணை செயலாளர் வனிதா, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜ்குமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் பத்மநாதன் உள்பட நிர்வாகிகள் மற்றும் பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க.வினர் மாவட்ட செயலாளர் டி.வி. கணே‌‌ஷ் தலைமையில் மாலை அணிவித்தனர். இவர்கள் தவிர அ.ம.மு.க, புதிய நீதி கட்சி உள்பட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் சார்பிலும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு சார்பில் பிறந்த நாள் விழா: ராணி வேலு நாச்சியார் உருவச்சிலைக்கு அமைச்சர் மாலை அணிவிப்பு
சிவகங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் மாலை அ ணிவித்து மரியாதை செலுத்தினர்.
2. எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவிப்பு
கடலூரில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
3. நினைவு தினம் அனுசரிப்பு: எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
4. தஞ்சையில், பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தினர்-பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி
நினைவு தினத்தையொட்டி தஞ்சையில் பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
5. நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி
நினைவு தினத்தையொட்டி தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.