வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஏர்கலப்பையுடன் ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாகையில் காங்கிரஸ் கட்சியினா் ஏா்கலப்பையுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகப்பட்டினம்,
மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாகை அபிராமி அம்மன் சன்னதி திடலில் காங்கிரஸ் கட்சியினா் ஏர்கலப்பையுடன், மாட்டு வண்டியில் ஏறி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், காங்கிரஸ் கட்சி திருச்சி வேலுசாமி, விவசாய அணி மாநில செயலாளர் மீரா உசேன், மாவட்ட தலைவர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், நவ்ஷாத், நகரத்தலைவர் ரவிச்சந்திரன், அப்துல் காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனுமதி மறுப்பு
மத்திய அரசு வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். ெடல்லியில் போராடும் விவசாயிகளை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ேகாஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் மாட்டு வண்டியில் அனுமதியின்றி ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து ெசன்றனா்.

Related Tags :
Next Story