நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி + "||" + M.G.R. AIADMK workers pay homage to the idol by wearing garlands
நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி
நினைவு தினத்தையொட்டி தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர்,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
தஞ்சை தெற்கு மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி. பரசுராமன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், பால்வள தலைவர் காந்தி, பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருப்பு சட்டை
இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதாரவிச்சந்திரன், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், முன்னாள் துணை மேயர் மணிகண்டன், காவேரி சிறப்பங்காடி தலைவர் பண்டரிநாதன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல், ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் பாலை.ரவி, ஒன்றிய கவுன்சிலர் முத்துமாறன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பிரிவு செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.
சிவகங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் மாலை அ ணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடல்நலக்குறைவால் இறந்த முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனனின் உடல் அடக்கம் நேற்று நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.