தஞ்சையில், பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தினர்-பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி
நினைவு தினத்தையொட்டி தஞ்சையில் பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர்,
பெரியாரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.க. சார்பில் மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
இதில் பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் குணசேகரன், மண்டல தலைவர் அய்யனார், நகர தலைவர் நரேந்திரன், செயலாளர் முருகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் வெற்றி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க.-காங்கிரஸ்
தி.மு.க. சார்பில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் மாநகர செயலாளர் நீலமேகம் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், ஒன்றிய செயலாளர் முரசொலி ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர்் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமையிலும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் வீரமோகன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பல்வேறு அமைப்புகள், இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Related Tags :
Next Story