உளுந்தூர்பேட்டை அருகே 220 பேருக்கு விலையில்லா ஆடுகள் குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார்


உளுந்தூர்பேட்டை அருகே 220 பேருக்கு விலையில்லா ஆடுகள் குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 25 Dec 2020 11:22 AM IST (Updated: 25 Dec 2020 11:22 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தில் கால்நடை துறை சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தில் கால்நடை துறை சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கால்நடை துறை துணை இயக்குனர் தமிழரசு தலைமை தாங்கினார். திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 220 பேருக்கு தலா 4 ஆடுகள் வீதம் மொத்தம் ரூ.26 லட்சம் மதிப்பில் விலையில்லா ஆடுகளை வழங்கினார். நிகழ்ச்சிகள் ஒன்றிய துணை செயலாளர் ராஜாராம், நாச்சியார்பேட்டை நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story