நினைவு தினம் அனுசரிப்பு: எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு


நினைவு தினம் அனுசரிப்பு: எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 25 Dec 2020 11:24 AM IST (Updated: 25 Dec 2020 11:24 AM IST)
t-max-icont-min-icon

நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விக்கிரவாண்டி,

கிளியனூரில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வானூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் பக்தவச்சலம், கிளியனூர் கூட்டுறவு சங்க தலைவர் பிரபு, பாசறை ஒன்றிய செயலாளர் சுமன், முன்னாள் ஒன்றிய பேரவை செயலாளர் சிவசுப்பிரமணியம், நிர்வாகிகள் முருகன், சிவக்குமார், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கஞ்சனூர்

விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கஞ்சனூரில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் எசாலம் பன்னீர் தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய பேரவை செயலாளர் சரவணக்குமார், ஒன்றிய துணை செயலாளர் குமார், அவைத்தலைவர் பழனி, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரவி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் மணி, ஒன்றிய பாசறை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் துரைமுருகன், ஒன்றிய மாணவரணி செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அந்துவான், நிர்வாகிகள் ராமச்சந்திரன், மணிகண்டன், செ.புதூர் மணி, காந்தி, கிருஷ்ணன், பெரியான், தும்பூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நகர அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு நகர செயலாளர் பாபு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.அழகுவேல்பாபு, வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், முன்னாள் நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியையொட்டி நகர கட்சி அலுவலகத்திலிருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு சென்று பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.,அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பச்சையாபிள்ளை, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன், பொருளாளர் வெற்றிவேல், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்கத்தலைவர் ரங்கன், மாவட்ட நிர்வாகி செல்வராஜ், நகர துணை செயலாள் புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story