குடியாத்தம் அருகே ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது


குடியாத்தம் அருகே ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 26 Dec 2020 2:16 AM IST (Updated: 26 Dec 2020 2:16 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் தாலுகா மோர்தானா ஊராட்சியில் உள்ள ஜங்காலபல்லி கிராமத்தைச் சேர்ந்த முனியசாமியின் மனைவி கலைவாணி (வயது 29).

நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108 அவசர ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதில் கலைவாணி குடியாத்தம் அவசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறிது தூரம்சென்ற நிலையில் அவருக்கு வலி அதகமானதால் ஆம்பூலன்சை நிறுத்தி, பிரசவம் பார்க்கப்பட்டது. கலைவாணிக்கு ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. அதைத்தொடர்ந்து அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Next Story