சட்டமன்ற தேதா்தலில் எத்தனை அணிகள் வந்தாலும் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளா் பாலகிருஷ்ணன் பேட்டி
சட்டமன்ற தேர்தலில் எத்தனை அணிகள் வந்தாலும் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
சிக்கல்,
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழவெண்மணியில் கடந்த 1968-ம் ஆண்டு கூலி உயா்வு கேட்டு நடந்த போராட்டத்தில் 44 தொழிலாளா்கள் ஒரு குடிசையில் வைத்து உயிரோடு எரித்து கொல்லப்பட்டனா். இந்த தினத்தை ஆண்டு தோறும் வெண்மணி தியாகிகள் நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று 52-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கீழ வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகை மாலி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நினைவிடத்தில் கொடி ஏற்றிவைத்து, தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், எம்.செல்வராஜ் எம்.பி., மாநில குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து. ஐ.வி. நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், இந்திய கம்யூனிஸ்டு தேசிய குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, சி.ஐ.டி.யூ. மாநில பொதுசெயலாளர் சுகுமாறன், விவசாய சங்க மாநில தலைவர் சுப்ரமணியன். விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் அமிர்தலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளா்கள் நீலமேகம்(தஞ்சை), சுந்தரமூர்த்தி(திருவாரூர்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர்கள் சம்பந்தம்(நாகை), சீனிவாசன் (மயிலாடுதுறை) மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். முடிவில் கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.
பின்னா் பாலகிருஷ்ணன் நிருபா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சமூகத்தில் சாதி ஏற்ற தாழ்வுகள் கொடி கட்டிப்பறக்கிறது. அந்த நிலையை மாற்ற நாங்கள் போராடி வருகிறோம். கொரோனா நிவாரணமாக குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் ஆயிரம் ரூபாய்க்கு மேல் தர முடியாது என முதல்-அமைச்சா் எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டார்.
தற்போது தேர்தல் வருவதால் பொங்கல் பாிசாக ரூ.2,500 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது போதாது, ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், வீடுகள் பாதி்க்கப்பட்டோருக்கு ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக அடுத்த கட்ட போராட்டம் நடத்த தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 3 மற்றும் 4, 5-வது அணி என்று எத்தனை அணிகள் வந்தாலும் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும். இவ்வாறு அவா் கூறினார்.
Related Tags :
Next Story