ஈரோடு மாவட்டத்தில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நம்பியூர்
ஈரோடு வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஈரோடு வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நம்பியூர் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் பொன்னுச்சாமி, நம்பியூர் பேரூர் தே.மு.தி.க. செயலாளர் சங்கர், மாவட்ட அவைத் தலைவர் செல்வகுமார், மாவட்ட தே.மு.தி.க. துணைச் செயலாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நம்பியூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பெரியாரின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் சண்முகம், தே.மு.தி.க. செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் சக்திவேல், கேப்டன் மன்ற செயலாளர் கணேசன், கோசணம் ஊராட்சி செயலாளர் சக்திவேல் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தந்தை பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பவானி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கே.பி. துரைராஜ் தலைமையில் பெரியார் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அமைப்பினர் கலந்து கொண்டனர். அதே போல் கவுந்தப்பாடி அருகே அய்யம்பாளையத்தில் நடந்த ம.திமு.க. பவானி ஒன்றிய செயலாளர் வீரக்குமாரன், தந்தை பெரியார், அம்பேத்கர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story