டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டம்; மக்கள் ஜனநாயக கட்சியினர் 20 பேர் கைது


விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்
x
விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்
தினத்தந்தி 27 Dec 2020 1:15 AM IST (Updated: 26 Dec 2020 11:32 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஜனநாயக கட்சியினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டம்
வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

20 பேர் கைது
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது ஷாஜகான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர். இதில் 2 பெண்கள் உள்பட 20 பேர் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 20 பேரையும் பெருந்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பெருந்துறை சென்னிமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story