பேராசிரியர் வீட்டில் தீ விபத்து
புதுக்கோட்டையில் பேராசிரியர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை பூங்கா நகரில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் உள்ள இரண்டாம் தளத்தில், அரசு கல்லூரி பேராசிரியர் பிரான்சிஸ் ஆபிரகாம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தார். நேற்று அவரது வீட்டில் இருந்த புகை வந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஏணி வைத்து இரண்டாம் தளத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
தீ விபத்து
அப்போது, குளிர்சாதன பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story