தரிசனத்துக்கு கொரோனா சான்று குறித்த விவகாரம்: அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு கோர்ட்டு தீர்ப்பு படிப்பினையை தந்துள்ளது நாராயணசாமி பேட்டி
திருநள்ளாறு சனிபகவானை தரிசிக்க, கொரோனா சான்றிதழ் அவசியம் என்ற உத்தரவு குறித்த கோர்ட்டு தீர்ப்பு அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு படிப்பினையை தந்துள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
காரைக்கால்,
திருநள்ளாறு சனீஸ்வரனின் சனிப்பெயர்ச்சி விழா என்பது, உலகத்தில் உள்ள அனைத்து இந்துக்களால் கொண்டாடப்படும் பிரதான விழா. இந்த ஆண்டு பல தடைகளை தாண்டி இறைவன் அருளால் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. எல்லா மத திருவிழாக்களும் சிறப்பாக நடைபெற வேண்டும். அதனை யாரும் தடை செய்யும் நோக்கில் செயல்படக்கூடாது. அதுவே எனது எண்ணம்.
ஆனால் அதனை தடை செய்யும் நோக்கில், கவர்னர் கிரண்பெடி அதிகார போதையில் செயல்பட்டார். அதாவது, சனிப்பெயர்ச்சி விழா குறித்து, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுத்துவரும் வேளையில், சும்மா இருந்துவிட்டு, கடைசி நேரத்தில், சனிப்பெயர்ச்சி விழா தொடர்பாக பொதுநல வழக்கில், கவர்னர் கிரண்பெடி, தானாக முன்வந்து தன்னை பிரதிவாதியாக இணைத்துக் கொண்டார். சன்னிதானம், அரசு, அமைச்சர்கள் எடுத்த மேல்முறையீட்டு பலனாக, சென்னை ஐகோர்ட்டு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதிக பக்தர்கள் தரிசனத்துக்கு நடவடிக்கை
மத நம்பிக்கை, வழிபாடுகளில், அதிகாரத்தில் இருப்பவர்கள் தலையிடக்கூடாது. கோர்ட்டு தீர்ப்பு, புதுச்சேரி மாநில மக்களுடைய வெற்றி, இந்துக்களுடைய வெற்றி. இந்த தீர்ப்பு அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு படிப்பினையை தந்துள்ளது. இனிவரும் நாளில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு கூடுதலான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு புதுச்சேரி அரசு ஆய்வு செய்து, பேரிடர் மீட்பு துறை மூலம் அதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story