போக்சோ சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு


போக்சோ சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Dec 2020 9:14 AM IST (Updated: 28 Dec 2020 9:14 AM IST)
t-max-icont-min-icon

போக்சோ சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு.

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ராமசாமிபுரம் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் ரமேஷ் (வயது 27). கூலி தொழிலாளியான இவர் தனது ஊர் அருகே உள்ள பகுதியில் 17 வயது சிறுமியிடம் பேசி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஒன்றாக இருந்து வந்ததாகவும், இதில் அந்த சிறுமி கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி ரமேசிடம் கூறியுள்ளார். ஆனால் ரமேஷ் திருமண ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ரமேசிடம் சென்று தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்க சென்றுள்ளனர். ஆனால் ரமேசுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story