உடன்குடி, ஆறுமுகநேரியில் தி.மு.க. சார்பில் மக்கள் சபை கூட்டம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு


உடன்குடி, ஆறுமுகநேரியில் தி.மு.க. சார்பில் மக்கள் சபை கூட்டம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Dec 2020 9:30 AM IST (Updated: 28 Dec 2020 9:30 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி, ஆறுமுகநேரியில் தி.மு.க. சார்பில் மக்கள் சபை கூட்டம் நடந்தது. இதில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

உடன்குடி,

உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாதவன் குறிச்சி பஞ்சாயத்து தாண்டவன்காடு கிராமத்தி தி.மு.க. சார்பில் மக்கள் சபை கூட்டம் நடந்தது.

மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, துணை அமைப்பாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் சேர்மனுமான பாலசிங் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ேபசினார்.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரி நகர தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் காந்தி மைதானம் அருகில் நடைபெற்றது. தி.மு.க. நகர பொறுப்பாளர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் அருணாசலம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். இதில் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட் போட்டி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மாவட்ட அளவில் 136 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி, உடன்குடி சிவலூர் மின்வாரிய மைதானத்தில் தொடங்கியது.

அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சென்னை தொழிலதிபர் அஜய்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டிகளில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் கிரிக்கெட் உபகரணங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து 10 நாட்கள் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ 50 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.40 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.30 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் அனைத்து அணிகளுக்கும் வெற்றிக்கோப்பை, சிறந்த ஆட்டக்காரருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

தொடக்க விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story