டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சியினர் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருத்துறைப்பூண்டி அருகே மனிதநேய ஜனநாயக கட்சியினர் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 30 நாட்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் செய்யது மீரான், ஒன்றிய செயலாளர் ஆசிப் அலி, நகர செயலாளர் பசீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநிலச் செயலாளர் தாஜூதீன, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரகமத்துல்லா உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 30 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து பேச்சுவார்த்ைத நடத்தவேண்டும். அல்லது வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story