நெய்தலூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
நெய்தலூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கரூர்,
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி
அதன்படி நெய்தலூர் கிராம பொதுமக்கள் சார்பில் புகார் பெட்டியில் போடப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தில் தை திருநாளை முன்னிட்டு 20 வருடங்களுக்கு முன்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதற்குபின் இதுவரை நடைபெறவில்லை. எனவே வருகிற 28.02.2021 அன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் ஜல்லிக்கட்டில் பொதுமக்களுக்கோ, காளைகளுக்கோ மற்றும் மாடுபிடி வீரர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை கடைப்பிடித்து நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
குடிநீர் பற்றாக்குறை
கரூர் ரெங்கநாதபுரம் ஊராட்சி, கட்டளை கிராம ஊர்பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் மனு போடப்பட்டது. அந்த மனுவில்,
கட்டளை கிராமத்தில் ஆயிரக்கணக்கான நன்செய் நிலங்கள் காலங்காலமாக விவசாயம் செய்து வருகிறோம். ஆயிரக்கணக்கான டன் நெல் கொள்முதல் அரசு செய்து வருகிறது. எங்கள் கிராமத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட நீரேற்று நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கரூர் மாவட்டம், நகராட்சி, பேரூராட்சி, தாந்தோணி, புலியூர் உள்பட பல கிராமங்களுக்கு எங்கள் ஊரில் இருந்து குடிதண்ணீர் செல்கிறது.
இதற்கே கோடை காலங்களில் குடிதண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில் கட்டளை கிராமத்தில் ராட்சத கிணறுகள் இரண்டு அமைத்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கு எந்த அனுமதியும் அரசு சார்பில் வழங்கக்கூடாது. இந்த திட்டம் மட்டும் நிறைவேறினால் கட்டளை கிராமமும், குடிநீரேற்று நிலையங்களும், விவசாயமும் பாலைவனமாகி விடும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இலவச வீடு கேட்டு...
கண்ணமுத்தாம்பட்டியை சேர்ந்தவர்கள் போட்ட மனுவில், நாங்கள் கண்ணமுத்தாம்பட்டியில் 10 வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். நாங்கள் மிகவும் வறுமையில் வாழ்கிறோம். எனவே எங்களுக்கு இலவச வீடு அல்லது வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story