ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 21 பவுன் நகைகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வெள்ளியணை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 21 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வெள்ளியணை,
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மூக்கணாங்குறிச்சி ஊராட்சி, முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 72). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் கடந்த 23-ந் தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு கிறிஸ்துமஸ் விழாவிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். பின்னர் நேற்று முன்தினம் மாலை பெரியசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
21 பவுன் நகைகள் திருட்டு
பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 21 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் பீரோவில் இருந்து துணி மணிகளும் சிதறி கிடந்தது. இதுகுறித்து உடனடியாக வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ைகரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story