திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் முற்றுகை


திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 29 Dec 2020 6:35 AM IST (Updated: 29 Dec 2020 6:35 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி திருச்சி மாநகர குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

திருச்சி,

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கூட்டுகுடிநீர் திட்டம் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், பாதாள சாக்கடை திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக 19 வார்டுகளில் தொடங்கப்பட்டு இன்னமும் முடிக்கப்படாமல் உள்ளதாகவும், பல இடங்களில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் குண்டும்-குழியுமாக கிடப்பதாகவும் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி திருச்சி மாநகர குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. இதில், ஒருங்கிணைப்பாளர்கள் சக்திவேல், சுப்பிரமணியன், லெனின் உள்ளிட்ட நிர்வாகிகள், குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பு நிர்வாகிகளை மாநகர பொறியாளர் அமுதவல்லி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மண்சாலையாக இருக்கிற அனைத்து சாலைகளையும் தற்காலிகமாக சமன் செய்வதாகவும், தார்சாலைக்கு ஜனவரி 15-ந் தேதிக்குள் டெண்டர் விடப்படும் என்றும், அதன் பின்னர் பணிகள் தொடங்கும் என்றும், கூட்டு குடிநீர் திட்டத்தை ஓரிரு மாதங்களில் செயல்படுத்தப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. அதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. அதேவேளையில் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டால் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story