நிலுவை ஊதியம் வழங்கக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்


நிலுவை ஊதியம் வழங்கக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Dec 2020 7:33 AM IST (Updated: 29 Dec 2020 7:33 AM IST)
t-max-icont-min-icon

திருநள்ளாறு, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பதவிகளை விரைவில் நிரப்ப வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 நகராட்சி, 10 கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம், ஓய்வூதியம் வழங்கவேண்டும், நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை உடனே வழங்கவேண்டும், திருநள்ளாறு, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பதவிகளை விரைவில் நிரப்ப வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளுக்காக நேற்று திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வாயிலில் உள்ளாட்சி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் திவ்யநாதன் தலைமை தாங்கினார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுப்ரமணியன், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், துணை தலைவர் அய்யப்பன், இணை பொதுச்செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன துணைத்தலைவர் உலகநாதன், துணை பொதுச்செயலாளர்கள் சண்முகராஜ், நாகப்பன், நாகராஜன், ஓய்வுபெற்ற ஊழியர் நலச்சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் சங்க பொறுப்பாளர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

Next Story