ஐரோப்பிய நாடுகளில் இருந்து தென்காசி வந்த 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை கலெக்டர் பேட்டி
லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தென்காசி வந்த 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கலெக்டர் சமீரன் கூறினார்.
தென்காசி,
தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் ஆகியோர் நேற்று குற்றாலம் மெயின் அருவியில் ஆய்வு செய்தனர். அங்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? என்று ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்டுப்பாடுகள்
குற்றாலத்தில் உள்ள அருவிகளை மையமாக கொண்டு இங்கு உள்ளவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. இந்த அருவிகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அரசின் வழிகாட்டுதல்படி குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். சமூக இடைவெளியை கடைபிடித்து அருவிகளில் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை குளிக்க அனுமதிக்கப்படுகிறது. இங்குள்ள கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் சுற்றுலா பயணிகளுக்கும் முககவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு இல்லாமல் வருபவர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
30 ஆயிரம் பேர்
தளர்வுக்கு பிறகு அருவிகளில் குளிக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து முதலில் 1,500 பேர் வரை வந்து குளித்தனர். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து வந்த விடுமுறை நாட்களில் ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் வரை குளித்து சென்று உள்ளனர். குளிக்க வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டால் அவர்களுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
இனி வரும் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த பண்டிகை நாட்களில் பேரூராட்சி நிர்வாகத்தில் இருந்து சீருடை அணிந்த 50 பேர் பணியாற்றுவார்கள்.
ெகாரோனா
தென்காசி மாவட்டத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்று வெகுவாக குறைந்துள்ளது. தற்போது 44 பேருக்கு தொற்று உள்ளது. இதில் 19 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து 19 பேர் வந்துள்ளனர். அவர்களை பரிசோதித்ததில் நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story