காலமுறை ஊதியம் வழங்கக்கோரி உள்ளாட்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


காலமுறை ஊதியம் வழங்கக்கோரி உள்ளாட்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Dec 2020 10:00 AM IST (Updated: 29 Dec 2020 10:00 AM IST)
t-max-icont-min-icon

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலரை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். கொரோனா கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். அனைவருக்கும் நடைமுறை உள்ள ஊதியம் மற்றும் நிலுவை தொகையை உடன் வழங்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

மேல்நிலை நீர்த்ேதக்க தொட்டி இயக்குனர், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலரைபணி நீக்கம் செய்யப்படுவதை உடன் நிறுத்த வேண்டும். 6-வது ஊதியக்குழு, 7-வது ஊதியக்குழு பாக்கியை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சந்திரசேகர ஆசாத், மாவட்ட துணைத்தலைவர் காந்தி, மாவட்ட பொருளாளர் நேரு, பழ வியாபாரிகள் சங்க தலைவர் செல்வம், நிர்வாகிகள் வேதமாணிக்கம், ரமேஷ், அகஸ்டின், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story