பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழ் தேசிய கட்சியினர் போராட்டம்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழ் தேசிய கட்சியினர் போராட்டம் நடத்தினர். இவர்களில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள 75 அடி உயர செல்போன் கோபுரத்தில் தமிழ் தேசிய கட்சியினர் ஏறி போராட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் சிவா முன்னிலை வகித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய காலம் தாழ்த்தும் மத்திய அரசையும், தமிழக கவர்னரையும் கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.
5 பேர் கைது
இதை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன், மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, செல்போன் கோபுரத்தில் ஏறியவர்களை கீழே இறங்கி வரும்படி அழைத்தனர். உடனே அவர்கள் கீழே இறங்கி வராமல் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து போலீசார் அழைத்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரும் கீழே இறங்கி வந்தனர்.
பின்னர் அவர்களை போலீசார் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்திற்கு ஜீப்பில் அழைத்து சென்றனர். இவர்களில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story