63 வேலம்பாளையம், புதுப்பாளையம் பகுதிகளில் டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு


63 வேலம்பாளையம், புதுப்பாளையம் பகுதிகளில் டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 29 Dec 2020 11:11 AM IST (Updated: 29 Dec 2020 11:11 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அறிவொளி நகர் 63 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

எங்கள் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கிராம ஊராட்சியில் மதுக்கடை திறக்க அனுமதி இல்லை என்று ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இடத்தை தேர்வு செய்து அதற்கான வேலைகள் நடக்கிறது. அந்தக் கடை அமையவிருக்கும் இடத்துக்கு அருகில் செல்வ விநாயகர் கோவில், அறிவொளி நகர் குடியிருப்பு பகுதி உள்ளது. எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுபோல் அவினாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு டாஸ்மாக் கடை இருக்கும்பட்சத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த புதிய டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Next Story