திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது


திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 30 Dec 2020 6:42 AM IST (Updated: 30 Dec 2020 6:42 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது.

திருச்சி,

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் தேர்தல் ஆணைத்தின் மூலம் நடைபெற்றுவருகிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், முசிறி மற்றும் மணப்பாறை ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

அரசியல் கட்சியினர் தற்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் மராட்டிய மாநிலத்திலிருந்து கடந்த வாரம் 5,686 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 4,341 கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என அறியக்கூடிய வி.வி.பேட் எந்திரம் 4,686-ம் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு திருச்சியில் வைக்கப்பட்டிருந்தது.

சரிபார்க்கும் பணி தொடங்கியது

தேர்தலை கருத்தில் கொண்டு முதற்கட்ட மராட்டியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு எந்திரங்களில் உள்ள பழைய பதிவுகளை அழித்து அவற்றை சரிபார்க்கும் பணி நேற்று பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது.

மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, சரிபார்க்கும் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆய்வு செய்தார். பெங்களூரு பெல் நிறுவனத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் இப்பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

15 நாட்கள் பணி

அப்போது நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேவைக்கு அதிகமான மின்னணு எந்திரங்களும், கட் டுப்பாட்டு எந்திரங்களும் கையிருப்பில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள பழைய பதிவுகளை அழித்து சரிசெய்யும் பணி தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும். இப்பணி நிறைவுபெற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பின்னர், தேர்தல் பணிகள் அறிவிக்கப்பட்டபின்னர் இதர பணிகள் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story