சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா


சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
x
தினத்தந்தி 30 Dec 2020 10:49 PM GMT (Updated: 30 Dec 2020 10:49 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

தா.பழூர்,

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் பவுர்ணமியோடு சேர்ந்து வரும் நாளன்று ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். மேலும் நடராஜ பெருமான் அவதரித்த நட்சத்திரம் திருவாதிரை என்பதால் கூடுதல் சிறப்பை பெற்று அன்றைய தினம் சிவன் கோவில்களில் நடராஜபெருமானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த வகையில் அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாதர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

விழாவையொட்டி நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், நார்த்தை, பழரசம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதத்தை கோவில் குருக்கள் செந்தில் வழங்கினார். தா.பழூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் திருவெம்பாவை, திருவாசகம், திருமுறை பதிகங்கள் பாடினர். விழாவில் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பக்தர்கள் தரிசனம்

இதேபோல் திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில், கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் திருவாதிரை விழாவையொட்டி நேற்று ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Next Story