திருமயத்தில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்


திருமயத்தில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 31 Dec 2020 5:58 AM IST (Updated: 31 Dec 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் தொடர்ந்து திருமயத்தில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

திருமயம்,

புதுக்கோட்டையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் தொடர்ந்து திருமயத்தில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அவருக்கு திருமயம் ஒன்றிய செயலாளர் திருமேனி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் இருந்து தகரக் கொட்டகை முன்பாக பொது மக்களிடம் பேசுகையில், நான் திருமயம் வருவது புதிதல்ல. எங்களின் நோக்கம் ஏழைகளை மேன்மைப்படுத்த வேண்டும் என்பதே ஆகும். மற்றவர்கள் தேர்தல் நேரத்தில் மக்களை காசு கொடுத்து இழுத்து விடலாம் என எண்ணுகிறார்கள். நாங்கள் மக்களை பசுமை பாதையில் அழைத்துச் செல்ல உள்ளோம். மக்களுக்கு தேவையான திட்டங்களை மக்கள் நீதி மய்யம் கட்சியால் மட்டும் தான் செய்ய முடியும். வறுமை கோட்டுக்கு கீழ் என்பதை இல்லாமல் ஆக்குவதே எங்களின் லட்சியமாகும் என பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சரவணன் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story