பெண் ஊழியருக்கு பாதிப்பு எதிரொலி: கவர்னர் கிரண்பெடிக்கு கொரோனா பரிசோதனை


பெண் ஊழியருக்கு பாதிப்பு எதிரொலி: கவர்னர் கிரண்பெடிக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 31 Dec 2020 2:38 AM GMT (Updated: 31 Dec 2020 2:38 AM GMT)

பெண் ஊழியருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து கவர்னர் கிரண்பெடிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

புதுச்சேரி, 

புதுவை கவர்னர் மாளிகையில் பணியாற்றி வருபவர் இளம்பெண் ஈ‌ஷா. கோவையை சேர்ந்த இவர் கவர்னரின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் பதிவிடும் பணிகளை கவனித்து வந்தார்.

சமீபத்தில் அவர் கோவைக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதை தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி மற்றும் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் 25 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) தெரிய வரும்.

ஏற்கனவே கவர்னர் மாளிகையில் அவுட்சோர்சிங் முறையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கவர்னர் கிரண்பெடிக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story