வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 31 Dec 2020 2:40 AM GMT (Updated: 31 Dec 2020 2:40 AM GMT)

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாகையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாகை அவுரித்திடலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அகஸ்டின்அற்புதராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தொகுதி செயலாளர் ஆதித்தன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மதியழகன், கலை இலக்கிய பண்பாட்டு பாசறை செயலாளர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story