தோவாளை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு இருக்கிறதா? கலெக்டர் ஆய்வு


தோவாளை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு இருக்கிறதா? கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 31 Dec 2020 9:24 AM IST (Updated: 31 Dec 2020 9:24 AM IST)
t-max-icont-min-icon

தோவாளை தாலுகா அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு இருக்கிறதா? என கலெக்டர் அரவிந்த் முன்னிலையில் ஆய்வு நடந்தது.

பூதப்பாண்டி,

கன்னியாகுமரி சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக 3820 வாக்குப்பதிவு எந்திரங்கள், 2915 கட்டுப்பாட்டுக் கருவிகள், 3145 வி.வி. பேட் எந்திரங்கள் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டன.

பின்னர், அவை பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலக குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

முதல்நிலை சரிபார்த்தல் பணி

இந்த எந்திரங்களில் முதல் நிலை சரிபார்த்தல் பணி நேற்று தோவாளை தாலுகா அலுவலகத்தில் தொடங்கியது. முன்னதாக மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், நாகர்கோவில் உதவி ஆணையர் (ஆயம்) சங்கரலிங்கம், தோவாளை தாலுகா தாசில்தார் ஜூலியன் ஹீவர், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் சேகர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை ேசர்ந்தவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டிருந்த கதவு திறக்கப்பட் டது.

பின்னர், இரும்பு பெட்டிகளில் இருந்த எந்திரங்கள் வெளியே எடுத்து வரப்பட்டு மாவட்ட கலெக்டர் அரவிந்த் முன்னிலையில், பெல் நிறுவன பொறியாளர்கள் எந்திரங்களை திறந்து அவைகளின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த முதற்கட்ட சரிபார்த்தல் பணியை மேற்கொண்டனர். கோளாறு ஏதேனும் இருக்கிறதா? என ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக அலுவலக நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் நுழைவாயில் வழியாக அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

Next Story